லஞ்சம் கேட்பதாக யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை


லஞ்சம் கேட்பதாக யூனியன் அலுவலகத்தில்   கிராம மக்கள் முற்றுகை
x

100 நாள் வேலை அட்டை புதுப்பிக்க லஞ்சம் கேட்பதாக யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை

திருமங்கலம்,

100 நாள் வேலை அட்டை புதுப்பிக்க லஞ்சம் கேட்பதாக யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

100 நாள் வேலை

கள்ளிக்குடி வட்டம் வெள்ளாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரகுண்டு கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கண்மாய் பகுதியை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணி புரிபவர்களுக்கு பழைய அட்டையை புதுப்பித்து புதிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழக அரசு தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்து உள்ளது. இதேபோல் சுந்தர குண்டு கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பழைய அட்டைக்கு பதிலாக புதிய அட்டை வழங்க ரூ.200 வழங்க வேண்டும். புதிதாக பணியில் சேர்பவர்கள் அட்டைக்கு ரூ.500 வழங்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் உத்தரவின் பேரில் பணித்தள பொறுப்பாளர்களுக்கு நிர்பந்தம் செய்வ தாகவும், மேலும் பணி நடைபெறும் நாட்களில் பணிக்கு வரும் ஒவ்வொருவரும் ரூ.5 கொடுத்து விட்டுத்தான் வேலையை பார்க்க வேண்டும் என கூறி, ஒவ்வொரு வரிடமும் 5 ரூபாய் பெற்று வந்துள்ளனர்.

முற்றுகை

இந்த நிலையில் 100 நாள் பணிகள் நடைபெறும்போது அதை வந்து ஆய்வு செய்யும் ஊராட்சி செயலாளர் காமாட்சி பெண்களை குறை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டிய தாக கூறப்படுகிறது.

இதனால் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊராட்சி மன்ற தலை வரிடம் சென்று கிராம மக்கள் புகார் அளித்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்க லஞ்சம் கேட்பதாக கள்ளிக்குடி யூனியன் அலுவ லகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story