காலிகுடங்களுடன் பூக்குளம் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை


காலிகுடங்களுடன் பூக்குளம் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை
x

காலிகுடங்களுடன் பூக்குளம் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்ைத முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

காலிகுடங்களுடன் பூக்குளம் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்ைத முற்றுகையிட்டனர்.

முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளது பூக்குளம் கிராமம். இந்த ஊரை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி முற்றுகையிட்டனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பூக்குளம் கிராம பகுதியில் பூக்குளம், கோகுலநகர், தெய்வேந்திரநகர் போன்ற பகுதிகளில் 350 வீடுகளுக்குமேல் உள்ளன.

இந்த பகுதியில் குடிநீர் ஆதாரமே இல்லை. பூக்குளம் குடியிருப்பு பகுதிக்கு 2 குழாய்களில் மட்டும் காவிரி குடிநீர் வாரம் 2 முறை இரவில் ஒரு மணி நேரம் மட்டும் சிறிதளவில் தண்ணீர் வருகிறது. இதை 20 வீடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே பிடித்து பயன்படுத்த முடியும். மற்ற பகுதிகளை சேர்ந்த கோகுல நகர், தெய்வேந்திர நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 3 கிலோ மீட்டர் தூரம் வயதானவர்கள் முதல் அனைவரும் சென்று உப்பாக உள்ள தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகிறோம்.

குடிநீர் ஆதாரம்

அங்கு செல்ல முடியாதவர்கள் வேறுவழியின்றி ரூ.13 கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுகுறித்து அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் பயன் இல்லை. ஜல்ஜீவன் வலைதளத்தில் புகார் செய்தபோது காவிரி குடிநீர் சப்ளை செய்வதாகவும், இதுதவிர உள்ளூர் குடிநீர் ஆதாரம் மூலம் வினியோகம் செய்வதாகவும் தவறான தகவலை அளித்து உள்ளனர்.

எங்கள் பகுதியில் உள்ளூர் குடிநீர் ஆதாரமே இல்லை. நாங்கள் ஊர் சார்பில் நிதி சேகரித்து நீர் ஆதாரம் உள்ள 3 இடங்களை கண்டறிந்து உள்ளோம். அந்த பகுதியில் எங்களுக்கு தண்ணீர் எடுத்து வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்தார்.


Next Story