டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதை கண்டித்து பெண்கள் முற்றுகை


டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதை கண்டித்து பெண்கள் முற்றுகை
x

டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதை கண்டித்து பெண்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் யூனியன் அலுவலகம் அருகே ஒத்தவீடு குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இந்த டாஸ்மாக் கடையை மேலூர் - நத்தம் ரோட்டுக்கு மாற்றம் செய்ய டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டு அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

அதன் பின்னர் மேலூர் - நத்தம் ரோட்டில் உள்ள பழையசுக்காம்பட்டியில் கடை திறக்க முயற்சி செய்ததை எதிர்த்து அங்குள்ள மக்கள் நேற்று முன்தினம் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் ஏற்கனவே இயங்கிய ஒத்தவீடு குடியிருப்பில் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story