அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதே எனது நோக்கம் -சசிகலா பேச்சு


அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதே எனது நோக்கம் -சசிகலா பேச்சு
x

பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதே எனது லட்சியம் என்று, தஞ்சையில் சசிகலா கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் சசிகலா சகோதரர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலாவுடன் இணைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திவாகரன் தனது நிர்வாகிகளோடு இணைந்தார்.

முன்னதாக விழா மேடையில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இக்கட்டான சூழ்நிலையும், குழப்பங்களும் ஏற்பட்டது. நானோ, விதி வசத்தால் பெங்களூருவில் சிறைபட்டு இருந்தேன். அதன் பிறகு பல்வேறு சூழ்ச்சிகள், துரோகங்கள் அரங்கேறியது. இதனால் கட்டுக்கோப்பாக இருந்த நம் இயக்கம், எதிரிகளின் ஆசைப்படி சிதறிப்போனது.

வேதனை

பிரிந்்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதே என் லட்சியம்.

அ.தி.மு.க.வை மீண்டும் அரியணையில் ஏற்றுவது தான் எனது ஒரே குறிக்கோள்.

நம் இயக்கத்தில் நடந்த நிகழ்வுகள் மனதுக்கு வேதனை அளிக்கிறது.

விரைவில் அனைத்தையும் சரி செய்து, அனைவரையும் ஒருங்கிணைத்து மீண்டும் நம் இயக்கம், புதுப்பொலிவு பெறும். தமிழக மக்கள் தி.மு.க.வினரை தள்ளி வைக்க தயாராகி விட்டனர். அடுத்து அமைய உள்ளது அ.தி.மு.க. ஆட்சிதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் நன்றி கூறினார்.


Next Story