குழந்தைகளுடன் மாயமான பெண் மீட்பு


குழந்தைகளுடன் மாயமான பெண் மீட்பு
x

குன்னம் அருகே குழந்தைகளுடன் மாயமான பெண் மீட்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொத்தவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி ரேவதி (27). இவர்களுக்கு கயல்விழி (3), சாதனா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரத்குமார் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் கொத்தவாசல் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரத்குமாரும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரேவதி கடந்த 3-ந் தேதி தனது 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு ஊரை விட்டு சென்றார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் மகள்களான திரிஷா (17), திவ்யா (14) ஆகியோரையும் அழைத்து சென்றார். இந்த சம்பவம் குறித்து குன்னம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் வலைவீசி தேடி வந்தார்.

இந்தநிலையில் மாயமான 5 பேரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 5 பேரையும் மீட்டனர். பின்னர் ரேவதி மற்றும் அவரது குழந்தைகளை கணவர் சரத்குமாருடனும், திரிஷா மற்றும் திவ்யா ஆகியோர் அவரது தந்தை முருகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story