நாமக்கல்லில் சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில்  சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி  அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
x

நாமக்கல்லில் சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

நாமக்கல்

நாமக்கல் நகராட்சி பூங்கா சாலையில் உள்ள குளக்கரை திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி அரசு பணி விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை அமைச்சர் வழங்கினார்.

இந்த கண்காட்சியில் நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் பணிகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சி வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.

இதில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகாராணி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story