நாமக்கல்லில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள்


நாமக்கல்லில்  கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள்
x

நாமக்கல்லில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள்

நாமக்கல்

அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி தபால்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் தபால் நிலையத்தில் நேற்று ஊழியர்கள் கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

அதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு இலாகா அந்தஸ்து மற்றும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஊழியர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.


Next Story