தேசிய திறனாய்வு தேர்வு; 5,672 மாணவ-மாணவிகள் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வை 5,672 மாணவ-மாணவிகள் எழுதினர்.
திருநெல்வேலி
8-வது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 4 ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் வகையிலான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 17 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 5 ஆயிரத்து 672 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 118 பேர் வரவில்லை. இந்த தேர்வை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணித்து நடத்தினார்கள்.
திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 286 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
Related Tags :
Next Story