வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு; தங்கத்தில் தேசியக்கொடி வடிவமைத்த தொழிலாளி


வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு; தங்கத்தில் தேசியக்கொடி வடிவமைத்த தொழிலாளி
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை:

நமது இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகின்ற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 'சுதந்திர தின அமுதப்பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை தொழிலாளி வி.எம்.டி. ராஜா என்பவர் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது போன்று 300 மில்லி கிராம் தங்கத்தில் வடிவமைத்து உள்ளார்.


Next Story