கடலூரில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை..!
கடலூர் பெண்ணை நகர் பகுதியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர்,
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும் அவரது ஆதரவாளருமான செந்தில்குமார் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக நித்தியானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டு புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நித்தியானந்தம் கடலூர் மாவட்டம் பெண்ணை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்ததாக வந்த தகவலை தொடர்ந்து சோதனை. நித்தியானந்தம் தங்கி இருந்ததாக கூறப்படும் வீட்டில் தற்பொது தேசிய புலனாய்வு முகமைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீட்டில் உள்ளவர்களிடம் நித்தியானந்தம் எப்பொழுது இங்கு வந்தார் இந்த வீட்டில் உள்ளவர்கள் யார் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இந்த வீட்டை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நித்தியானந்தம் வாடகைக்கு எடுத்து உள்ளதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.