தேசிய டேக்வாண்டோ போட்டி - மதுரை மாணவர்கள் தகுதி
தேசிய டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் தகுதி பெற்றனர்
மதுரை
தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று மதுரை மாவட்டத்தில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மேலும் 5 மாணவர்கள் டிசம்பர் 31-ந் தேதி முதல் ஜனவரி 4-ந் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலம் காசாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் டேக்வாண்டோ பயிற்சியாளர் மனோஜ்குமார், பள்ளியின் தலைவர் செந்தில்குமார் மற்றும் தாளாளர் குமரேஷ் பாராட்டி பரிசு வழங்கினர்.
Related Tags :
Next Story