கூடலூர் அருகே கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


கூடலூர் அருகே  கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x

கூடலூர் அருகே கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

தேனி

கூடலூரின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர், லோயர்கேம்ப் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் லோயர்கேம்ப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாணிக்கம் என்பவரது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் மாணிக்கம், கடைக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த தென்காசியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 31) ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதேபோல் தேவதானப்பட்டியில் பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோடு எழுவனம்பட்டி பிரிவு அருகே ஆட்டோவில் கடத்தி சென்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்திய உத்தமபாளையத்தை சேர்ந்த அப்பாஸ் மந்திரி (53), தேவதானப்பட்டியை சேர்ந்த உதுமான் அலி (43), ஆட்டோ டிரைவர் பெருமாள் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 140 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story