ஈரோடு அருகே ஆட்டோவில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


ஈரோடு அருகே ஆட்டோவில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
x

ஈரோடு அருகே ஆட்டோவில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு அருகே உள்ள சோலார் பஸ் நிலையம் பகுதியில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இங்கு நேற்று மாலை ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அப்போது பயணிகளை ஏற்றுவதற்காக, சோலார் நகராட்சி நகர் பகுதியை சே்ாந்த சக்திவேல் என்பவரும் தனது ஆட்டோவை தயார் நிலையில் வைத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய ஆட்டோக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை அருகில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பார்த்து சக்திவேலிடம் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் யுவராஜ் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் வெகுநேரமாக அந்த பாம்பு அவரது கண்ணுக்கு தென்படவில்லை. சுமார் ஒரு மணிநேர தேடலுக்கு பின்னர் ஆட்டோவின் பின்பகுதியில் பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் போட்டார். பிடிபட்டது 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஆகும். இதைத்தொடர்ந்து பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடுவதற்காக, ஈரோடு ரோஜாநகரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


Related Tags :
Next Story