மொடக்குறிச்சி அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து
மொடக்குறிச்சி அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
குப்பை கிடங்கு
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மொடக்குறிச்சி அருகே தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த குப்பை கிடங்குக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்து குப்பையில் தீ வைத்து விட்டனர். இதனால் கடந்த 3 நாளாக லேசான கரும்புகை வந்தது.
கொழுந்துவிட்டு தீ எரிந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புகை அதிகமாக பரவியதுடன் குப்பை கிடங்கில் திடீரென தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் கரும்புகை மூட்டம் எழுந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது.
இதனால் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.