தேனி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; ஆசிரியர் உள்பட 5 பேர் காயம்


தேனி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; ஆசிரியர் உள்பட 5 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:47 PM GMT)

தேனி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆசிரியர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

தேனி

தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 42). இவர் முருக்கோடை அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவருடைய மனைவி வெண்ணிலா (38) திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வருவாய் ஆய்வாளராக உள்ளார். பெரியசாமி தனது மனைவி, மகன் யஸ்வின் (12), மகள் வேதிதா (9) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள தனியார் பூங்காவுக்கு நேற்று முன்தினம் சென்றார்.

பின்னர் அங்கிருந்து புறவழிச்சாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். வனத்துறை நாற்றுப்பண்ணை அருகில் வந்தபோது, எதிரே ஆண்டிப்பட்டி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கோபிநாத் (27) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பெரியசாமி, அவருடைய மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேரும், மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோபிநாத் ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில், கோபிநாத் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story