விளாத்திகுளம் அருகேமாட்டு வண்டி பந்தயம்


விளாத்திகுளம் அருகேமாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இ்ந்த பந்தயத்தில் 38 ஜோடி காளைகள் சீறிப்பாய்ந்தன.

மாட்டு வண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.

இதில் மதுரை, தூத்துக்குடி தேனி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 38 ஜோடி காளை மாடுகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன.

பரிசளிப்பு

சிறிய பூஞ்சிட்டு, பெரிய பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இ.வேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து வைப்பார் வரை 7 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடந்தது.

இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் சாரதிகளுக்கு, விழா கமிட்டி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தை ஆங்காங்கே ரோட்டின் ஓரம் நின்று பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


Next Story