நெல்லூர்: அதிக சத்தம் எழுப்பிய சைலன்சர்களை ரோட் ரோலர் ஏற்றி அழித்த போலீசார்


நெல்லூர்: அதிக சத்தம் எழுப்பிய சைலன்சர்களை ரோட் ரோலர் ஏற்றி அழித்த போலீசார்
x

சைலன்சர்களை வரிசையாக அடுக்கி வைத்து, அவற்றின் மீது ரோட் ரோலர் வாகனத்தை ஏற்றி போலீசார் அவற்றை அழித்தனர்.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் நெல்லூரில் சாலை விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பும் வகையில் இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சைலன்சர்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. நீண்ட நாட்கள் இருப்பில் வைக்கப்பட்டிருந்த அவற்றை அழிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சர்களை வரிசையாக அடுக்கி வைத்து, அவற்றின் மீது ரோட் ரோலர் வாகனத்தை ஏற்றி போலீசார் அவற்றை அழித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


1 More update

Next Story