நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா
x

வந்தவாசியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி தேரடியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்தநாள் விழா வீரதீர நாளாக கொண்டாடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் பாமாபதி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரவிச்சந்திரன், கோட்ட பொறுப்பாளர் ரவி, நகர செயலாளர் வேணுகோபால் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story