வேலூர்:'கருணாநிதி மாணவர் விடுதி' - முதல் அமைச்சர் திறந்து வைத்தார்


வேலூர்:கருணாநிதி மாணவர் விடுதி - முதல் அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 1 Feb 2023 2:36 PM GMT (Updated: 1 Feb 2023 2:38 PM GMT)

கலைஞர் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும், ஆராய்ச்சி கட்டிடத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்.

வேலூர்,

முதல் அமைச்சர் மு. க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார். தமிழ் நாட்டில் முதன் முறையாக வேலூர் மாவட்டத்தில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் , நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தார்.. அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6 மணி அளவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு கலைஞர் கருணாநிதி மாணவர் விடுதி, மற்றும் பேர்ல் ஆராய்ச்சிக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.


Next Story