"புதிய மின்சாரக் கொள்கை விவசாயிகளை பாதிக்காது" - கவர்னர் தமிழிசை பேட்டி


புதிய மின்சாரக் கொள்கை விவசாயிகளை பாதிக்காது - கவர்னர் தமிழிசை பேட்டி
x

புதிய மின்சாரக் கொள்கை மக்களுக்கு பயன் அளிக்கும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை,

மத்திய அரசின் புதிய மின்சாரக் கொள்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் பிறந்தநாளையொட்டி, சென்னை பாண்டி பஜாரில் உள்ள அவரது சிலைக்கு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், புதிய மின்சாரக் கொள்கை மக்களுக்கு பயன் அளிக்கும் எனக் கூறினார்.

இது தொழிற்சாலைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், பொதுமக்களுக்கான மின்சார கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கை என்றும், மாற்று எரிசகதியை ஊக்கப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


Next Story