மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை
x

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 357 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மின்னணு குடும்ப அட்டை

இந்நிகழ்ச்சியில், வருவாய்த்துறையின் சார்பில் இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 14 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

மேலும் தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் சார்பில் காரைக்குடியில் இளையோருக்காக நடைபெற்ற குரலிசை போட்டி, பரதநாட்டியப் போட்டி, ஓவியப்போட்டி, கருவியிசைப் போட்டி, எஸ்.மாஸ் மற்றும் கிராமிய நடனப்போட்டி ஆகியவைகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.


Next Story