ராஜகோபுரம் கட்டுவது தொடர்பாக பண்ணாரி அம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரி திடீர் ஆய்வு


ராஜகோபுரம் கட்டுவது தொடர்பாக பண்ணாரி அம்மன் கோவிலில்  அறநிலையத்துறை அதிகாரி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2022 8:59 PM GMT (Updated: 19 May 2022 4:19 AM GMT)

பண்ணாரி அம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரி திடீர் ஆய்வு

ஈரோடு

சத்தியமங்கலம் அருேக பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரூ.11 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 9 நிலை ராஜகோபுரம் கட்டப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். மேலும் ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் கோவிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி பண்ணாரி அம்மன் கோவிலுக்கு திடீரென வந்தார். பின்னர் அவர் ராஜகோபுரம் அமைக்கும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அதற்கு உண்டான திட்ட பணிகளையும் பொறியாளரிடம் கேட்டு அறிந்தார். மேலும் தினசரி பிரசாதம் தயார் செய்யும் இடம், பக்தர்கள் கட்டணமில்லாமல் முடி எடுக்கும் இடம், அன்னதான கூடம், குங்குமம் தயார் செய்யும் இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டதுடன், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது பற்றியும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story