நெய்வேலி கலவரம் எதிரொலி: கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடல்


நெய்வேலி கலவரம் எதிரொலி: கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடல்
x

கோப்புப்படம் 

கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் கானப்பட்ட நிலையில், போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மாலை 6 மணி முதல் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.


Next Story