சென்னையில் 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை


சென்னையில் 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
x

சென்னையில் இன்று 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. ஆனால் சுமார் 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது.

இதனிடையே பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு 15-ந்தேதி காலை முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் இன்று 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story