தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இதுவரை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவர்களிடம் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தன. சோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை. ஆகவே, குரங்கு அம்மை நோய் குறித்த அச்சம் மக்களிடம் தேவையில்லை

மக்களை தேடி மருத்துவம் ஒரு மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது. குறுகிய காலத்தில் சுமார் 70 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். வரும் 12-ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story