தொழிலாளியை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கைது


தொழிலாளியை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கைது
x

ஈத்தாமொழி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கைது

கன்னியாகுமரி

ஈத்தாமொழி,

ஈத்தாமொழி அருகே உள்ள தர்மபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 50), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மாலை அத்திக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தார். அப்போது, கோட்டார் கலைநகரை சேர்ந்த ரஞ்சித் என்ற ரஞ்சித் குமாரும் (26) மது வாங்க வரிசையில் நின்றார். கூட்ட நெரிசலால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்தநிலையில் மறுநாள் மாலையில் அதே டாஸ்மாக் கடைக்கு மகாலிங்கம் மதுவாங்க சென்றுள்ளார். அவர், மது வாங்கிவிட்டு கொய்யன்விளை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ரஞ்சித்குமாரும், அவருடைய நண்பரான மணியன்விளையை சேர்ந்த கனகராஜ் (34) ஆகியோர் சேர்ந்து வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாலிங்கத்தை சரமாரியாக வெட்டினர். பின்னர், அவரிடம் இருந்த 2 மதுபாட்டில்கள்,ரூ.1500 ஆகிவற்றை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த மகாலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் சாமி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர்(பொறுப்பு)் காந்திமதி விசாரணை நடத்தி ரஞ்சித்குமாரை கைது செய்தார். கனகராஜ் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார் மீது ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், அவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story