உயர்த்தியதில் இருந்து 50 % குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச்சொல்வதா? பழனிவேல் தியாகராஜன் டுவிட்


உயர்த்தியதில் இருந்து 50 % குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச்சொல்வதா?  பழனிவேல் தியாகராஜன் டுவிட்
x

எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது என்று பழனிவேல் தியாகராஜன் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.

சென்னை,

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திய வரியை மத்திய அரசு நேற்று குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 7-ம் குறைந்தது. பெட்ரோல், டீசல் விலை குறைவு மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்தபோது, உள்ளூர் வரியை குறைக்காத மாநிலங்கள் இப்போது அவற்றை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:- " எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது.

2014- முதல் பெட்ரோல் ரூ. 23(250%), டீசல் ரூ.29 (900 %) என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 50 சதவீதம் குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். இதுதான் கூட்டாட்சியா?" என்று தெரிவித்துள்ளார்.


Next Story