இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை


இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை
x
தினத்தந்தி 20 April 2023 11:01 PM IST (Updated: 21 April 2023 12:27 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை

விருதுநகர்

சாத்தூர்

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதை யூடியூப் வாயிலாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதனை தொடர்ந்து நேற்று 10 உண்டியல்கள், கோசாலை உண்டியல் 1 திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கிப்பட்டன. அதில் ரொக்கமாக 42 லட்சத்து 16 ஆயிரத்து 716 ரூபாய் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட காணிக்கையை கோயிலின் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. தங்கம் 119 கிராம், வௌ்ளி 627 கிராம் கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், மதுரை, துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு, அய்யப்ப சேவா சங்கம் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்து அறநிலைய துறை விருதுநகர் மாவட்ட உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story