சதுரகிரி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
சதுரகிரி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை பணி நடைபெற்றது.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பேரையூர் சரக ஆய்வாளர் சடவர்மபூபதி, பரம்பரை அறங்காவலர் ராஜா பெரியசாமி முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது. இதில் சுந்தர மகாலிங்கம் கோவில் உண்டியலில் ரூ.23,74,235, சந்தன மகாலிங்கம் கோவில் உண்டியலில் ரூ.3,59,315 என மொத்தம் ரூ.27, 33,550 காணிக்கையாக கிடைத்தது.
Related Tags :
Next Story