பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது/

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி பாதுகாப்புடன் நிரந்தர தன்மையுடைய பணியிடத்தில் பணிமர்த்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில மையம் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஜான்பிரிட்டோ தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சுபின் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், விஜயகுமார், லீடன்ஸ்டோன், போபி, தியாகராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்க பொருளாளர் மைக்கேல் லில்லி புஷ்பம் நிறைவுரையாற்றினார். முடிவில் டாரதி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

--


Next Story