எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேலும் 44 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேலும் 44 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 44 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சிக்கு இருவரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். ஏட்டிக்கு போட்டியாக இருவரும் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் 2 மகன்கள் உள்பட அவரது ஆதரவாளர்கள் 18 பேரை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். சற்று நேரத்தில், எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்த நிலையில், நேற்றும் 44 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

44 பேர் நீக்கம்

அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் 44 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் விவரம் வருமாறு:-

டாக்டர் சி.விஜயபாஸ்கர்

பொள்ளாச்சி வி.ஜெயராமன் (தேர்தல் பிரிவு செயலாளர்), டாக்டர் சி.விஜயபாஸ்கர் (அமைப்பு செயலாளர்), கீர்த்திகா முனியசாமி (மகளிர் அணி இணைச் செயலாளர்), ஆர்.எஸ்.ராஜேஷ் (வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர்), டி.ஜி.வெங்கடேஷ் பாபு (வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர்).

நா.பாலகங்கா (தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர்), வி.சோமசுந்தரம் (காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர்), திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர்), சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் (செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்).

கே.சி.வீரமணி

பா.பென்ஜமின் (திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர்), வி.அலெக்சாண்டர் (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்), மாதவரம் வி.மூர்த்தி (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்), பி.வி.ரமணா (திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்), எஸ்.ஆர்.கே.அப்பு (வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர்), த.வேலழகன் (வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்).

கே.சி.வீரமணி (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்), சு.ரவி (ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்), தூசி கே.மோகன் (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்), அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்), கே.ஏ.பாண்டியன் (கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்), ஆ.அருண்மொழிதேவன் (கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்).

இரா.குமரகுரு (கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்), கே.அசோக்குமார் (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்), கே.பி.அன்பழகன் (தருமபுரி மாவட்ட செயலாளர்), ஜி.வெங்கடாஜலம் (சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர்), கே.சி.கருப்பணன் (ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர்).

சி.மகேந்திரன் (திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்), அம்மன் கே.அர்ச்சுணன் (கோவை மாநகர் மாவட்ட செயலாளர்), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்), கப்பச்சி டி.வினோத் (நீலகிரி மாவட்ட செயலாளர்), எம்.பரஞ்ஜோதி (திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்).

ஆர்.காமராஜ்

ப.குமார் (திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர் மாவட்ட செயலாளர்), எஸ்.பவுன்ராஜ் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), ஆர்.காமராஜ் (திருவாரூர் மாவட்ட செயலாளர்), பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர்), பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை மாவட்ட செயலாளர்).

எம்.ஏ.முனியசாமி (ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்), தச்சை என்.கணேசராஜா (திருநெல்வேலி மாவட்ட செயலாளர்), எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்), எஸ்.பி.சண்முகநாதன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்), டி.ஜாண்தங்கம் (கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர்), ஏ.அன்பழகன் (புதுச்சேரி மாநில (கிழக்கு) செயலாளர்).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

15 எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள 44 பேரில், 15 பேர் எம்.எல்.ஏ.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story