ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆவின் நிறுவனம் தனது பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறான சூழ்நிலை கடந்த 22 மாதங்களாக ஆவின் நிறுவனத்தில் நிலவுகிறது. தமிழ்நாட்டு மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய முடியாத நிலை நிலவுகிறது.

ஆவின் நிறுவனம் ஆக்கப்பூர்வமான பாதையில் செல்வதற்கு பதிலாக அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் திறமையின்மைக்கு ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டு.

ஆவின் பால் மற்றும் இதர பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக விலை கொடுத்து பொதுமக்கள் தனியார் பாலை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். எனவே முதல்-அமைச்சர் ஆவின் நிறுவன செயல்பாடுகள் குறித்து உடனடியாக ஓர் ஆய்வை மேற்கொண்டு அங்கு நிலவும் அனைத்து குழப்பங்களை தீர்க்கவும் ஆவின் பால் மற்றும் அதன் பொருட்கள் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Next Story