மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
அன்னவாசல் அருகே காவேரிநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மோகன் தலைமை தாங்கினார். மாரிமுத்து வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். கூட்டத்தில் காவேரிநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால் அதற்கு போதுமான மருத்துவர்கள் இல்லை. மேலும் சுற்றுவட்டார பெண்கள் பயன்பெறும் வகையில் மகப்பேறு மருத்துவரை உடனடியாக நியமிக்க வேண்டும். இல்லையெனில் இதனை வலியுறுத்தி வருகிற ஆகஸ்டு 8-ந் தேதி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், காவேரி நகர், சத்தியமூர்த்தி காலனி, பழைய காலனி, ரெயில்வே நிலையம் பகுதி, மேஸ்திரி காலனி ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் அப்பகுதியில் பள்ளிக்கூடத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். சத்தியமூர்த்தி காலனியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது, கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும். சேதமடைந்துள்ள சத்தியமூர்த்தி காலனி சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் நாகராஜ் மூர்த்தி, சேக்தாவூது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.