பேரிடர் காலத்தில் மீன்பிடி படகுகளை பாதுகாக்க அறிவுறுத்தல்


பேரிடர் காலத்தில் மீன்பிடி படகுகளை பாதுகாக்க அறிவுறுத்தல்
x

சேதுபாவாசத்திரம் பகுதியில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு நடத்தினார். அப்போது பேரிடர் காலத்தில் மீன்பிடி படகுகளை பாதுகாக்க அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் பகுதியில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு நடத்தினார். அப்போது பேரிடர் காலத்தில் மீன்பிடி படகுகளை பாதுகாக்க அறிவுறுத்தினார்.

கூடுதல் கலெக்டர் ஆய்வு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டார். பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் கொள்ளுக்காடு ஊராட்சியில் உள்ள புயல் பாதுகாப்பு இல்லத்தை பார்வையிட்டார். அதன்பின் புதுப்பட்டினம் ஊராட்சியில் கடலோரப் பகுதியில் உள்ள வடிகால்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தடுப்புச்சுவர் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல் மல்லிப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டார்.

உத்தரவு

அப்போது இயற்கை பேரிடர் காலங்களில் மீன்பிடி படகுகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து மீனவர்களிடம் அறிவுரை வழங்கினார். மேலும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மழை நீர் வடிகால்களை ஆய்வு மேற்கொண்டு மழை நீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story