ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x

பாபநாசத்தில் ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

தஞ்சாவூர்

பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பறக்கும் படை அதிகாரி தமிழ்வாணன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏர்வாடி கூட்டுறவு அங்காடியில் 400 கிலோ அரிசி, 11 கிலோ துவரம் பருப்பு, 5 லிட்டர் பாமாயில் ஆகிய ரேஷன் பொருட்கள் முறைகேடு செய்திருந்தது கண்டறியப்பட்டது. அதன்பேரில், அந்த கடையின் விற்பனையாளர் பாலகிருஷ்ணனுக்கு ரூ.11,250 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல ஒன்பத்துவேலி ரேஷன் கடையில் 200 கிலோ அரிசி, 13 கிலோ சர்க்கரை முறைகேடு செய்திருந்தது கண்டறியப்பட்டது. இதில் ஈடுபட்ட விற்பனையாளர் பாஸ்கரனுக்கு ரூ.7,600 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வழுத்தூர் கூட்டுறவு அங்காடியில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர் குமாருக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் கபிலன் உடன் இருந்தார்.








Next Story