அரசு மருத்துவமனையில் புதிய கட்டிட பணிகளை அதிகாரிகள் ஆய்வு


அரசு மருத்துவமனையில் புதிய கட்டிட பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x

அரசு மருத்துவமனையில் புதிய கட்டிட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கரூர்

தோகைமலையில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசவம் உள்ளிட்ட அனைத்து பொது சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை அதிகமாகி வருவதால் கூடுதல் கட்டிடம் கட்ட ேவண்டும் என ெபாதுமக்கள் ேகாரிக்கை விடுத்தனா். இதையடுத்து 2021-22-ம் ஆண்டு நமக்கு நாமே திட்ட நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில், மருத்துவர் அறை, பிரசவத்திற்கு பின் கவனிப்பு அறை, 4 கழிவறை கட்ட பணிகள் ெதாடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதையடுத்து புதிய கட்டிட பணிகளை தோகைமலை ஒன்றிய ஆணையர் விஜயகுமார், உதவி திட்ட இயக்குனர் முத்துப்பாண்டியன், உதவி செயற்பொறியாளர் சரவணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.


Next Story