முள்ளக்காட்டில் மூதாட்டி தவறவிட்ட3¼ பவுன் நகையை போலீசாரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு


முள்ளக்காட்டில் மூதாட்டி தவறவிட்ட3¼ பவுன் நகையை போலீசாரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முள்ளக்காட்டில் மூதாட்டி தவறவிட்ட 3¼ பவுன் நகையை போலீசாரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு ரேஷன் கடை எதிரில் சாலையில் கிடந்த 3¼ பவுன் தங்க சங்கிலியை எம்.சவேரியார்புரம் செல்வகாந்தன் மனைவி டெய்சி எடுத்து முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அந்த நகையை தவறவிட்ட முள்ளக்காட்டு ஆரோக்கியசாமி மனைவி பாப்பாத்தியிடம் (வயது 68), போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஒப்படைத்தார். அந்த நகையை போலீசாரிடம் ஒப்படைத்த டெய்சிக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.


Next Story