வேலைவாய்ப்பு மையம் சார்பில் குரூப்-4 மாதிரி தேர்வு


வேலைவாய்ப்பு மையம் சார்பில்  குரூப்-4 மாதிரி தேர்வு
x

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டு, இந்த தேர்வு வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதற்காக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் கடந்த மே மாதம் 23-ந்தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குரூப்-4 முழு மாதிரி தேர்வு வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இந்த மாதிரி தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் தங்களின் பெயர், குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் எண் ஆகியவற்றை 9791559974, 8220771597 என்ற வாட்ஸ்-அப் எண்களுக்கு அனுப்பி பதிவு செய்ய வேண்டும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story