ஆண்டிப்பட்டியில் குட்கா விற்ற 4 கடைகளுக்கு 'சீல்'
ஆண்டிப்பட்டியில் குட்கா விற்ற 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
தேனி
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி குட்கா விற்பனை செய்த கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆண்டிப்பட்டியில், தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் தலைமையில் அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 4 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. இதேபோல் கம்பத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. தேனி மாவட்டம் முழுவதும் சுமார் 100 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story