ஆண்டிப்பட்டியில் சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்


ஆண்டிப்பட்டியில்  சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

ஆண்டிப்பட்டியில் சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

தேனி

75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஆண்டிப்பட்டியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆண்டிப்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை ஆண்டிப்பட்டி போலீசார் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையம் முதல் தெப்பம்பட்டி சாலை பிரிவு வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகள் சுதந்திர தின விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். இந்த ஊர்வலத்தில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அறிவித்துள்ளபடி வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும், இந்த நாளில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவுபடுத்துவோம் என மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.


Next Story