கூடலூர்-கம்பம் சாலையில் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு
கூடலூரில், கம்பம் சாலையில் கால்நடைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
தேனி
தேனி மாவட்டம் கூடலூர் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இதற்காக விவசாய பணிக்காக அதிக அளவில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். அவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட அனுமதி கிடையாது. இதனால் கால்நடைகள் சாலையோர ஓடைகளில் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. இதையடுத்து காலையில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில் கூடலூர்-கம்பம் சாலையில் விவசாயிகள் கால்நடைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்போது கால்நடைகள் மறியல் செய்வதுபோல் சாலையை அடைத்து கொண்டு சென்றன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல வழியில்லாமல் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story