வாகனம் மோதி வாலிபர் சாவு
வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சேலம் மாவட்டம், ஆத்தூர், கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்ராஜ் (வயது 63). இவர் கடந்த 3 ஆண்டுகளாக சின்னசேலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து, குரால் கைகாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சரவணன் (35).
திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் இவர், சில நாட்களுக்கு முன்பு காளசமுத்திரத்துக்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவா் சேலம் -விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் காளசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story