பெரிய வெங்காயம் வரத்து வழக்கத்தை விட அதிகம்


பெரிய வெங்காயம் வரத்து வழக்கத்தை விட அதிகம்
x

திருப்பூர் மார்க்கெட்டிற்கு பெரிய வெங்காயம் வரத்து வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. இதனால் வெங்காய விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

திருப்பூர்

திருப்பூர் மார்க்கெட்டிற்கு பெரிய வெங்காயம் வரத்து வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. இதனால் வெங்காய விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

வரத்து அதிகரிப்பு

திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் இங்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த மார்க்கெட்டுக்கு கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள மொத்த விற்பனை மார்க்கெட்டிற்கு கனரக லாரிகளில் ஒவ்வொரு லாரியிலும் சுமார் 25 டன் எடை கொண்ட வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

கடந்த பல மாதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டும் வெங்காய வரத்து இருந்்ததால் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காய விலை அதிகமாக காணப்பட்டது. மொத்த விற்பனை விலையாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் 32 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மராட்டிய மாநிலத்தில் இருந்தும் வெங்காயம் வருவதால் திருப்பூருக்கு வரத்து அதிகரித்துள்ளது.

விலை சரிவு

வழக்கமாக தினமும் சராசரியாக 40 முதல் 60 டன் வெங்காயம் வந்த நிலையில் தற்போது சுமார் 100 டன் வெங்காயம் வரத்து உள்ளது. இதனால் திருப்பூர் மார்க்கெட்டில் மொத்த விற்பனை விலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.18 முதல் ரூ.22 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சில்லரை விலையாக ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதில் அளவில் மிகவும் சிறியதாக உள்ள வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் சீசன் ஆரம்பித்துள்ளதால் வரும் நாட்களில் வெங்காயம் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story