மகளிர் போலீஸ் நிலையம் திறப்பு
மங்களமேடு உட்கோட்டத்தில் மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது ஏ.டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) சங்கர் உடனிருந்தார். பெரம்பலூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன் (தலைமையிடம்), வேலுமணி (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சீராளன் (மங்களமேடு உட்கோட்டம்), பழனிச்சாமி (பெரம்பலூர் உட்கோட்டம்) மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story