3 கிராமங்களுக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம்
புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை,
மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பாச்சேத்தி, மேலநெட்டுர், குவளைவேலி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழரசி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார். அதன்படி நேற்று மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் திருப்பாச்சேத்தி, மேலநெட்டுர், குவளைவேலி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், மானாமதுரை யூனியன் சேர்மன் லதா அண்ணாதுரை, துணை சேர்மன் முத்துச்சாமி, நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மேலபசலை ஊராட்சி தலைவர் சிந்துஜா சடையப்பன், மேலநெட்டூர் ஊராட்சி தலைவர் சங்கீதா ராஜ்குமார், மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, மாவட்ட பிரதிநிதி மூர்த்தி, காளியப்பன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், நகர் மாணவரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.