மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை தாலுக்கா, அரியத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நயப்பாக்கம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் தனியார் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்றும் நிலையம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கைகளில் பதாகைகளை பிடித்துக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொஷங்களை எழுப்பினர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, இந்த தொழிற்சாலை அமைந்தால் தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் நலம், நீர் நிலைகள், விவசாயம் வனவிலங்குகள், குடிநீர், வாழ்வாதாரம் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்படும். கடந்த ஜனவரி 26-ந்தேதி கிராம சபை கூட்டத்திலும் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொது மக்களிடம் இது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் கிராம பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற்று தொழிற்சாலைக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தோம். எனவே இந்த தொழிற்சாலை அமைந்தால் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, காப்பு காட்டில் உள்ள வன விலங்குகள் பாதிக்கப்படும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கூறினர்.


Next Story