தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்
முதுகுளத்தூர் பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றார்கள்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி ராவுத்தர் சாஹிப் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 20 நாட்களாக குறுவட்டார அளவிலான தடகள போட்டியில், குழு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. முதுகுளத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கடலாடி, சாயல்குடி உட்பட 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14,17,19 வயது பிரிவுகளில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் 146 புள்ளிகள் பெற்று முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்களையும், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் கமால் பாட்சா, முகம்மது உசேன், அன்சாரி ஆகியோரை ஜமாத் தலைவர் எம்.காதர்மகைதீன், கல்விக்குழு உறுப்பினர் செய்யது முமீன், தாளாளர் சாகுல்ஹமீது, தலைமை ஆசிரியர் சுல்தான் அலாவுதீன், உதவி தலைமை ஆசிரியர்கள் குரைசி, ஜாகிர்உசேன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர்.