23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்


23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்
x

சிவகங்கை மாவட்டத்தில் 23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

நெல் கொள்முதல் நிலையங்கள்

இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சம்பா 2022-23 பருவ நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து நெல் கொள்முதல் வரத்து இருப்பதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக சிவகங்கை தாலுகாவில் உள்ள வேம்பத்தூர், சோழபுரம், தமராக்கி தெற்கு, மானாமதுரை தாலுகாவில் உள்ள சின்ன கண்ணனூர், முத்தனேந்தல், மிளகனுர், விளத்தூர், கட்டிக்குளம்.

23 இடங்களில்...

காளையார்கோவில் தாலுகாவில் உள்ள புல்லுக்கோட்டை, சாத்தரசன் கோட்டை, திருப்புவனம் தாலுகாவில் உள்ள தஞ்சாக்கூர், திருப்பாச்சேத்தி, முதுவன் திடல், பிரமனூர், கீழராங்கியம், ஏனாதி, இளையான்குடி தாலுகாவில் உள்ள கீழநெட்டூர், முனைவென்றி, தாயமங்கலம், கல்லல் தாலுகாவில் உள்ள எஸ்.ஆர். பட்டினம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள நெற்குப்பை, காவானூர், திருக்கோஷ்டியூர் ஆகிய 23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story