சென்னை காவல் அருங்காட்சியகத்தில் ஓவிய கண்காட்சி


சென்னை காவல் அருங்காட்சியகத்தில் ஓவிய கண்காட்சி
x

ஏழு நாட்கள் நடைபெற்ற ஓவிய கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்டு களித்தனர்.

சென்னை,

கடந்த மே 18-ந்தேதி சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள், கைவினை சிலைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வருகை தந்து அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பலவகையான ஓவியங்களை கண்டு களித்தனர்.




Next Story