பொதுமக்கள்-காவல்துறைக்கு பாலமாக ரோந்து போலீசார் செயல்பட வேண்டும்


பொதுமக்கள்-காவல்துறைக்கு பாலமாக ரோந்து போலீசார் செயல்பட வேண்டும்
x

பொதுமக்கள்-காவல்துறைக்கு பாலமாக ரோந்து போலீசார் செயல்பட வேண்டும் என்று கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.

திருச்சி

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகரில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள 50 பீட் ரோந்து பணிக்கு 3 ஷிப்டுகளாக சுழற்சி முறையில் 200 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் போலீசார் ரோந்து மேற்கொள்ளும் வகையிலான இந்த திட்ட நிகழ்ச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பீட் ரோந்து வாகன அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

நல்லுறவு

அவர் பேசுகையில், பீட் ரோந்து போலீசார் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டும். அந்த பகுதியில் உள்ள சிறு, சிறு பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக கண்டறிந்து, அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றம் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் விக்னேஷ்வரன் மற்றும் உதவி கமிஷனர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த சுழற்சி முறையில் பணியாற்றும் பீட் ரோந்து போலீசாரின் சிறப்பான செயல்பாடுகளின் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கமிஷனர் தெரிவித்தார்.


Next Story